தமிழ்நாடு

நாளைமறுநாள் முதல் பொதுத்தேர்வு: மாணவர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமா?

Published

on

தமிழகத்தில் நாளைமறுநாள் முதல் பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முகக்கவசம் அவசியமா என்பது குறித்து சுகாதாரத் துறை விளக்கம் அளித்துள்ளது

தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக கவசம் தேவையில்லை என சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது

தமிழகத்தில் நாளை மறுநாள் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க இருக்கும் நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் முகக்கவசம் மாணவர்களுக்கு தேவையில்லை என்பது மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்

தேர்வு எழுதும் மாணவர்கள் முகக்கவசம் அணிந்து கொண்டு தேர்வு எழுதுவதில் மிகுந்த சிரமத்தை அளிக்கும் என்பதால் மாணவர்களுக்கு மட்டும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து சுகாதாரத் துறை ஏற்கனவே ஒரு தரப்பினர் இடம்பெற்ற இந்த முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் மாணவர்கள் தேர்வு எழுதும் போது தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது

 

 

seithichurul

Trending

Exit mobile version