தமிழ்நாடு

புதுச்சேரியில் ஊரடங்கா? ஆளுனர் தமிழிசை செளந்திரராஜன் தகவல்

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான புதுவையில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியபோது, ‘புதுச்சேரியில் ஊரடங்கு அமல்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகவில்லை என தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் என்ற பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை அவர் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’இந்தியாவின் 11 மாநிலங்களில் கொரோனா அதிகரித்துள்ளதாகவும் ஆனால் புதுச்சேரியில் அத்தகைய நிலை இல்லை என்றும் எனவே ஊரடங்கு அமல் படுத்தும் வாய்ப்பு புதுச்சேரியில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் நேற்று வரை மொத்தம் 42 ஆயிரத்து 776 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில் 40 ஆயிரத்து 317 பேரில் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது புதுவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 686 என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version