இந்தியா

கேரள மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் பினரயி விஜயன்!

Published

on

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 30 ஆயிரத்துக்கும் மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்த நிலையில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த ஊரடங்கு குறித்து முதல்வர் பினராயி விஜயன் அவர்கள் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதை அடுத்து கேரள மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பில் கடந்த சில மாதங்களாக கட்டுக்குள் இருந்தாலும் அண்டை மாநிலமான கேரளாவில் தினந்தோறும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். இதனால் அம்மாநிலத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன என்பதும், திங்கள் முதல் சனி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 20 ஆயிரத்துக்கும் குறைவானோர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்படுவது மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளதை அடுத்து ஊரடங்கு வாபஸ் பெறுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து இன்று முதல் கேரளா முழுவதும் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஊரடங்கு இல்லை என்று அறிவிப்பை முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க முடி செய்திருப்பதாகவும் அதற்குள் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் பினரயி விஜயன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் வரும் அக்டோபர் 4-ந்தேதி முதல் திறக்கப்படும் என்றும் அதற்குள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் பினராய் விஜயன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பை அடுத்து கேரள மாநிலத்தில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதால் அம்மாநில மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version