இந்தியா

ஆகஸ்ட் 15, 22ல் ஊரடங்கு கிடையாது: கேரள அரசு அறிவிப்பு!

Published

on

தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதும் கடந்த சில நாட்களாக அம்மாநிலத்தில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தினமும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களிலும் கேரளாவில் கடந்த சில மாதங்களாக முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 22ஆம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு கிடையாது என கேரள அரசு அறிவித்துள்ளது. இதனால் கேரள மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏற்கனவே பக்ரீத் பண்டிகையின் போது ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது என்பதும் இதனையடுத்து இதுகுறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் ஓணம் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்படும் நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஊரடங்கு உத்தரவில் தளர்வு ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தவறாமல் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணியாமல் யாரும் வெளியே வரக்கூடாது என்றும் கேரள அரசு பொது மக்களை அறிவுறுத்தி உள்ளது.

Trending

Exit mobile version