தொழில்நுட்பம்
சர்வதேச இணையதள ஷட்டவுன்(Shutdown) இந்தியாவிற்கு பாதிப்பில்லை!
![Internet shutdown - Bhoomitoday No internet shutdown in India: Cyber Security official](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/10/Internet-shutdown.jpg)
டெல்லி: சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்று ஊடகங்களில் செய்தி வெளியானதை அடுத்து அதனால் இந்தியாவிற்குப் பாதிப்பில்லை என்று மத்திய இணையப் பாதுகாப்புத் துறை விளக்கம் அளித்துள்ளது.
வெள்ளிக்கிழமை காலை ரஷ்யா சர்வதேச அளவில் இணையதள ஷட்டவுன் ஏற்படும் என்றும் பல இடங்களில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிகளவில் இணையதளத் துண்டிப்பு ஏற்படும் என்று தெரிவித்து இருந்தது.
இதற்கு விளக்கம் அளித்த இந்திய இணையப் பாதுகாப்புத் துறை ‘இந்தியாவில் இணையதள ஷட்டவுன் ஏற்படாத அளவிற்கு முன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது’.
உலகின் பிற நாடுகளில் இந்த இணையதள ஷட்டவுன் ஏற்பட்டாலும் இணையதளப் பயனர்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.