செய்திகள்

இந்தி மொழி திணிப்பு இல்லை: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கருத்து!

Published

on

டிடி தமிழ் தொலைக்காட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தி தின விழாவில், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தனது உரையில் அவர் கூறியதாவது: “இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும். இந்தி மொழி திணிக்கப்படவில்லை. தமிழகத்தில் இந்தி மொழி கற்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழகத்தின் பல பகுதிகளில் சென்று மக்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது, மக்கள் இந்தி மொழியை ஆவலுடன் கற்கின்றனர் என்பதை கவனித்தேன்.

மத்திய அரசு, பிரதமர் மோடியின் தலைமையில், அனைத்து மொழிகளுக்கும் சம அளவிலான முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில், தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் அவை ஒருபோதும் வெற்றிபெறாது. மேலும், தமிழக பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதம் புறக்கணிக்கப்பட்டுள்ளது,” என்று தெரிவித்தார்.

Poovizhi

Trending

Exit mobile version