சினிமா

இந்த வாரமும் பெரிய படம் ரிலீஸ் இல்லை.. பொன்னியின் செல்வன் 2வுக்கு அடித்தது ஜாக்பாட்!

Published

on

ராஜ ராஜ சோழனாக அருள் மொழி வர்மன் மாறுவதற்கு முந்தைய காலக்கட்டத்தில் நடந்த கதையாக அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குநர் மணிரத்னம் 2 பாகங்களாக இயக்கி தமிழ் சினிமாவின் பெருமையை உலகுக்கு உணர்த்தி உள்ளார்.

முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விட 2ம் பாகத்துக்கு திடீரென வரவேற்பு குறைய காரணமே பொன்னியின் செல்வன் நாவலில் இருந்த சில முக்கிய திருப்பங்களை அப்படியே மாற்றி தனது இஷ்டத்துக்கு ஒரு முடிவை மணிரத்னம் வைத்தது தான் பிரச்சனையே என்கின்றனர்.

#image_title

ஆனாலும், படம் ரிலீஸாகி முதல் 4 நாட்களில் 200 கோடி வசூல் ஈட்டியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், 6 நாட்களில் ஒட்டுமொத்தமாக படத்தின் வசூல் 250 கோடியை தொட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், பொன்னியின் செல்வன் படத்துக்கு இந்த வாரமும் ஜாக்பாட் வாரம் தான் என்கின்றனர். எந்தவொரு பெரிய தமிழ் படங்களும் இந்த வாரம் வெளியாகாத நிலையில், பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 2ம் வாரத்திலும் வெற்றிநடை போட்டு மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமையான நாளை முதல் சனி, ஞாயிறு என இந்த வார இறுதிக்கான டிக்கெட்டுகள் பரபரப்பாக விற்றுத் தீர்ந்து வருகின்றன. 70 முதல் 80 சதவீத இருக்கைகள் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வார இறுதியில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் 300 முதல் 350 கோடி வசூல் செய்து இந்த ஆண்டில் இதுவரை வெளியான படங்களில் அதிக வசூல் வேட்டையை நடத்திய படமாக மாறும் என தெரிகிறது.

ஏற்கனவே அஜித்தின் துணிவு படத்தின் வசூலை பொன்னியின் செல்வன் 2 முந்திய நிலையில், அடுத்ததாக விஜய்யின் வாரிசு பட வசூலை இந்த வார இறுதிக்குள் பொன்னியின் செல்வன் 2 முறியடித்து முதல் இடத்தை பிடிக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் 2 வசூலை இந்த ஆண்டு வெளியாகும் ரஜினிகாந்தின் ஜெயிலர், விஜய்யின் லியோ அல்லது கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களில் எது முறியடிக்கும் என வெயிட் பண்ணிப் பார்ப்போம்!

author avatar
seithichurul

Trending

Exit mobile version