தமிழ்நாடு

ரேசன் கடை இனி விடுமுறை இல்லை: 30 நாட்களும் பொருட்கள் வழங்கப்படும் என அறிவிப்பு!

Published

on

ரேஷன் கடைகளில் இனி விடுமுறை இல்லாமல் 30 நாட்களிலும் பொதுமக்களுக்கு பொருள்கள் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

ரேஷன் கடைகளில் அவ்வப்போது அமைச்சர் ஐ பெரியசாமி ஆய்வு செய்து வரும் நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த பெண் ஊழியரிடம் ரேஷன் கடையில் வழங்கப்படுகின்ற பொருட்கள் தரம் குறித்தும் ஒவ்வொரு நாளும் எத்தனை ரேஷன் அட்டைகளுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது என்பது குறித்தும் கேட்டறிந்தார். அதன்பின்னர் ரேஷன் கடையில் உள்ள ஆவணங்களை சரிபார்த்த அவர் பயோமெட்ரிக் மிஷின் சரியாக வேலை செய்கிறதா என்றும் ஆய்வு செய்தார். அமைச்சரின் இந்த திடீர் ஆய்வு காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் என்னுடைய தலைமையில் அவ்வப்போது ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் ஐ பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் உள்ள அனைத்து காலி இடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் இதன்மூலம் 30 நாட்களும் ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு பொருட்கள் வினியோகம் செய்யப்படும் என்றும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு மாற்று அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா நிதி இதுவரை வாங்காதவர்கள் ஆகஸ்ட் 1 முதல் ரேஷன் கடைகளில் வந்து வாங்கிக் கொள்ளலாம் என்றும் 100% அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version