இந்தியா

இரண்டு கைகளும் இல்லை… காலால் ஸ்டேரிங் பிடித்து காரை ஓட்டும் இளம்பெண் (வீடியோ)

Published

on

பொதுவாக உடல் ஊனமுற்றவர்களுக்கு அதிக தன்னம்பிக்கை உண்டு. தங்களால் சாதிக்க முடியும் என உலகத்திற்கு காட்ட பயிற்சிகள் மூலம் ஆச்சர்யத்தக்க பல விஷயங்களை அவர்கள் செய்து வருகிறார். உதாரணத்திற்கு கைகள் இல்லாதவர்கள் அவர்களின் அன்றாட வேலைகளை கால்களாலேயே செய்து அசத்துவார்கள். நமக்குதான் அது ஆச்சர்யம். ஆனால், அவர்களுக்கு அது சாதாரண செயலாகத்தான் தெரிகிறது.

இந்நிலையில், கேரளாவில் வசிக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் அசாத்திய திறமை உடையவராக வலம் வருகிறார். 2 கைகள் இல்லாத நிலையிலும் இவர் பயிற்சி மூலம் கிராபிக்ஸ் டிசைனர் பணியை செய்து வருகிறார். மேலும், கால்களாலேயே காரை ஓட்டவும் பயிற்சி எடுத்துள்ளார். அதோடு, நீதிமன்றம் மூலம் அணுகி கார் ஓட்டுவதற்கு ஓட்டுனர் உரிமைத்தையும் பெற்றுள்ளார். காருக்குள் அமர்ந்த கால்களாலேயே சீட் பெல்ட் போட்டு, கார் சாவியை ஸ்டார்ட் செய்து அவர் அசால்ட்டாக காரை ஓட்டி செல்லும் வீடியோவை நடிகர் எஸ்.வி.சேகர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அவரின் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் பாராட்டியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version