தமிழ்நாடு

ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்தக்கூடாது: அதிரடி உத்தரவு

Published

on

ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ஆம் தேதி, அக்டோபர் 2ஆம் தேதி உள்பட ஒரு சில நாட்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும் என்பதும், இந்த கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்கள் அரசுக்கு அனுப்பப்பட்டு கிராமப் பகுதியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் அவர்கள் கிராமசபை கூட்டங்கள் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்றும் கிராமசபை கூட்டங்களால் தான் ஒரு நாடு வளர்ச்சி அடையும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்த கூடாது என கூறியுள்ள பஞ்சாயத்துராஜ் இயக்குனர் பிரவீன் அவர்கள், கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என கிராம பஞ்சாயத்துகளுக்கு ஆட்சியர்கள் உத்தரவிடுமாறு அறிவித்துள்ளார்.

அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் அரசின் உத்தரவை மீறி கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படுமா? என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version