தமிழ்நாடு

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கா? தமிழக சுகாதாரத்துறை விளக்கம்

Published

on

தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என வெளியாகி வரும் தகவல் பொய்யானது என்று விளக்கம் அளித்துள்ள தமிழக சுகாதாரத்துறை ஆனால் அதே நேரத்தில் கொரோனா பரவலை தடுக்க சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே உள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் எப்போது வேண்டுமானாலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற செய்தி சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இந்த நிலையில்தான் தமிழக சுகாதாரத்துறை இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழக சுகாதாரத்துறை நாளை முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் அதில் ஏற்கனவே விதித்த தளர்வுகளை நீக்குவது மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது ஆகியவை இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இரவு நேர ஊரடங்கோ அல்லது முழு ஊரடங்கோ பிறப்பிக்க வாய்ப்பில்லை என்றே தமிழக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தமிழக மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version