இந்தியா

கட்டுகடங்காத கூட்டம் எதிரொலி: திருப்பதி தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவால் பக்தர்கள் மகிழ்ச்சி!

Published

on

திருப்பதியில் தினந்தோறும் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் இருப்பதை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் 25 ஆயிரம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகிறது என்பதும் இந்த டோக்கன்கள் உள்ளவர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தினசரி வழங்கப்படும் 25 ஆயிரம் பெறுவதற்காக 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் பக்தர்கள் வரை வருகை தருவதால் டோக்கன்களை வாங்க வரும் பக்தர்களுக்கு மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் காயம் அடைந்து வருகின்றனர் .

நேற்றும் இன்றும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததை அடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது அதிரடி முடிவு எடுத்துள்ளது. இலவச தரிசன டோக்கன் இல்லாதவர்களையும் திருமலை தேவஸ்தானம் இன்று முதல் அனுமதி அளித்துள்ளது .

அதுமட்டுமின்றி இலவச டோக்கன் மூலம் ஏழுமலையானை தரிசிக்கும் நடைமுறையும் மாற்றப்படுவதாக தேவஸ்தனம் அறிவித்துள்ளது. எனவே இன்று முதல் பக்தர்கள் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த நடைமுறையின்படி திருப்பதி திருமலைக்கு நேராக சென்று கூண்டுக்குள் அடைபட்டு ஏழுமலையானை தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version