கிரிக்கெட்

INDvENG- மளமளவென அதிகரித்த கொரோனா; டி20 போட்டியில் ரசிகர்களுக்குத் தடை!

Published

on

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. முன்னதாக டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் இடையில் நடந்து முடிந்தது. அதில் இந்திய அணி, 3 – 1 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. டி20 தொடரைப் பொறுத்தவரை இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமநிலையில் வைத்துள்ளன. இன்னும் இரு அணிகளுக்கும் இடையில் மூன்று போட்டிகள் நடைபெறும். 

இந்நிலையில் இந்திய அளவிலும், குஜராத் மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரிப்பதால் ,அகமதாபாத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெறும் கடைசி மூன்று டி20 போட்டிகளுக்கு ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மார்ச் 18 மற்றும் 20 ஆம் தேதிகளில் மீதமுள்ள டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. இவை காலி ஸ்டேடியத்தில் தான் நடக்கும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

“கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆகவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் ஆலோசித்து அடுத்த 3 போட்டிகளுக்கும் ரசிகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது” என்றி குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

இங்கு நடந்த 2 டெஸ்ட் போட்டிகளுக்கும் முதலிரண்டு டி20 போட்டிகளுக்கும் 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இப்போது கோவிட்-19 பெருகி வருவதால் இந்த முடிவை எடுத்துள்ளனர்.  முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற 2வது போட்டியில் இஷான் கிஷன் ஹீரோவாக இந்தியா வென்றது. தொடர் தற்போது சமமாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version