இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வு கடைசி வாய்ப்பை விட்டவர்களுக்கு மறுதேர்வு கிடையாது: மத்திய அரசு

Published

on

சிவில் சர்வீஸ் தேர்வு எழுத கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடந்து வருகிறது. இடஒதுக்கீடு, வயதிற்கு ஏற்ப ஒருவர் குறிப்பிட்ட அளவில் சிவில் சர்வீஸ் தேர்வை மீண்டும் மீண்டும் எழுத வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டு சிவில் சர்வீஸ் தேர்வு நடைபெற்ற போது பலருக்கு அது கடைசி வாய்ப்பாக இருந்தது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சிலர் அந்தத் தேர்வை எழுத முடியாமல் போயினர். இதனைச் சுட்டிக்காட்டி ரச்சனா சிங் என்ற சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருந்தனர்.

இதற்கு விளக்கம் அளித்த மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார், சிவில் சர்வீஸ் தேர்வின் கடைசி வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்தும் எண்ணம் இல்லை என்றும் இதுகுறித்து மனுதாக்கல் செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கை விசாரணையை 25 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Trending

Exit mobile version