வணிகம்

இன்னும் இரண்டு மாதங்களுக்கு வங்கி விடுமுறையே இல்லை.. வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

Published

on

ஒவ்வொரு மாதமும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகள் போக குறைந்தபட்சம் 4 நாட்கள் வங்கி விடுமுறை வந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக ஜனவரி மாதம் புத்தாண்டு, விவேகானந்தர் பிறந்தநாள், பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தினம், உழவர் தினம் மற்றும் குடியரசு தினம் என சனி, ஞாயிறு விடுமுறை போக ஒருசில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் வண்டி ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. பெரும்பாலும் வங்கிகளுக்கு சென்று செய்ய வேண்டிய பணிகள் தற்போது குறைந்துவிட்டாலும் ஒரு சில பணிகள் கண்டிப்பாக வங்கிகளுக்கு சென்று தான் செய்ய வேண்டிய நிலை இருந்து வருகிறது.

அந்த வகையில் தொழில் செய்பவர்கள், வணிகர்கள் உள்பட பலரும் வங்கி விடுமுறை காரணமாக அதிருப்தி அடைந்தனர். இந்த நிலையில் வரும் பிப்ரவரி மற்றும் மார்ச் ஆகிய இரண்டு மாதங்களில் சனி, ஞாயிறு தவிர வேறு விடுமுறையே இல்லை என்ற தகவல் தற்போது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

பிப்ரவரி மாதம் இரண்டாவது சனி, நான்காவது சனி மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் அதே போல் மார்ச் மாதம் இரண்டாவது சனி, நான்காவது சனி மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் தவிர வேறு நாட்களில் வங்கி விடுமுறை எதுவும் இல்லை என்ற தகவல் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதனை அடுத்து ஏப்ரல் மாதம் தான் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, டாக்டர் அம்பேத்கார் ஜெயந்தி ஆகிய நாட்கள் விடுமுறை வருகிறது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் இன்னும் இரண்டு மாதங்களுக்கு நிம்மதியாக தங்கள் பணிகளை தொடரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version