தமிழ்நாடு

தமிழ் வழியில் படிக்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட்: தேர்வுத்துறை அறிவிப்பு!

Published

on

தமிழக அரசு தேர்வு துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த ஆண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஜனவரி 5ஆம் தேதி முதல் ஜனவரி 20-ஆம் தேதிக்குள் தேர்வு கட்டணத்தை செலுத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணத்தில் இருந்து விலக்கு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து பன்னிரண்டாம் வகுப்பு தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு கட்டணம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் வழக்கம்போல் எஸ்சி எஸ்டி மற்றும் ஒரு சில மாணவர்களுக்கு அளிக்கப்படும் தேர்வு கட்டண விலக்கு தொடரும் என்றும் தமிழக அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு காரணமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்கள் பெரும் வரவேற்பு தந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே திமுக அரசு பல்வேறு சலுகைகளை மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கியிருக்கும் நிலையில் தற்போது தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் இல்லை என்று அறிவிப்பு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

seithichurul

Trending

Exit mobile version