தமிழ்நாடு

1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து கிடையாது: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

Published

on

இந்த ஆண்டு 1-5 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு ரத்து கிடையாது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்ததாக வெளிவந்த செய்தி தவறானது என்றும், 1-12 வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.,

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாணவர்களுக்கான தேர்வுகள் என்பது நடைபெறவில்லை. குறிப்பாக பொதுத் தேர்வை சந்திக்க கூடிய மாணவர்களுக்கு கூட பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் முற்றிலுமாக குறைந்து விட்ட நிலையில் பொது தேர்வை நடத்துவதில் பள்ளி கல்வித்துறை தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதத்தில் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு மே மாதம் 13ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

எந்த வகுப்பு மாணவர்களுக்கு எவ்வளவு நாட்கள் விடுமுறை என்ற தகவல்கள் கூட வெளியாகி இருக்கின்றன. இந்த நிலையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்பது போன்ற ஒரு செய்தி பரவி வந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் விளக்கம் அளித்திருக்கிறார்

அவர் இதுகுறித்து தெரிவிக்கும்போது 1 முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்வுகள் நடைபெறும் எந்த ஒரு மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்படமாட்டாது குறிப்பாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கூட தேர்வுகள் நடைபெறாதுஎன்ற தகவல் என்பது தவறானது என்றும் தெரிவித்திருக்கிறார்

ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் பள்ளிகள் நடைபெற்று வரும் நிலையில் பள்ளியில் படித்து வருவதால் அவர்களுடைய கற்றல் அறிவுத் திறன் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை பரிசோதித்துப் பார்த்த தேர்வு நடைபெற இருக்கிறது என்றும், அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்படி 1-8 வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்ய மாட்டார்கள் என்றும் பள்ளிக்கல்வித்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version