இந்தியா

‘கோவிஷீல்டு’ தடுப்பூசி போட்டால் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாதா?

Published

on

இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வரும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளில் முக்கியமான ஒன்றாக இருப்பது சீரம் இன்ஸ்டிட்யூட் நிறுவனத்தின் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியாகும். இந்த தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின்’ தடுப்பூசியும் தான் தற்போது வரை இந்திய அளவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கோவாக்சின் தடுப்பூசிக்கு இன்னும் உலகளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அதே நேரத்தில் கோவிஷீல்டு தடுப்பூசியானது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டு உலக அளவிலான அங்கீகாரத்தைப் பெற்ற கொரோனா தடுப்பு மருந்து ஆகும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் சரி வர ஒப்புதல் கொடுக்கவில்லை என்று தற்போது சர்ச்சை எழுந்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டால் அவர்கள் ஐரோப்பா செல்ல அனுமதி கொடுக்கப்படாது என்று சொல்லப்பட்டு வருகிறது. இது பற்றி சீரம் நிறுவனத்தின் தலைவர் அடர் பூனாவாலா, ‘கோவிஷீல்டு மருந்து போட்டுக் கொண்ட பல இந்தியர்கள் ஐரோப்பிய ஒன்றியம் செல்வதில் சிக்கல் இருப்பதாக தெரிகிறது. இது குறித்து நான் மிக முக்கிய நபர்களுடன் அரசு அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளேன். இந்த விவகாரம் விரைவில் முடித்து வைக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.

Trending

Exit mobile version