இந்தியா

கேரளாவில் தியேட்டர்களுக்கு சலுகைகள் அறிவிப்பு! கண்டுகொள்வாரா முதல்வர் பழனிசாமி?

Published

on

கேரளாவில் திரையரங்குகளுக்கு கேளிக்கை வரி உள்ளிட்டவைகளில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக அங்குள்ள திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன. திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்துள்ள நிலையில் கேரள தியேட்டர்கள் மீண்டும் இயல்பு நிலைமைக்கு திரும்பி வருகிறது. இருப்பினும் இழந்த பொருளாதாரத்தை மீட்கும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தியேட்டர் நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், தியேட்டர்களுக்கு சில சலுகைகளை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் கேளிக்கை வரி செலுத்த வேண்டாம் என்றும், அந்த வரி வசூலிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் தியேட்டர்களைப் புதுப்பித்தல் உரிமம் பெறுதலுக்கான காலஅவகாசத்தை நீட்டியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கேரள மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு தியேட்டர் நிர்வாகத்தினர், திரைத்துறையினர் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. இதே சலுகை தமிழகத்தில் கொண்டு வரப்படுமா என்று தமிழக திரைத்துறையினர் எதிர்பார்த்துள்ளனர்.

Trending

Exit mobile version