உலகம்

இலங்கையில் அவசரநிலை வாபஸ்: அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவிப்பு

Published

on

இலங்கையில் அவசரநிலை சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது திடீரென அவசரநிலை வாபஸ் பெறப்படுவதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என பொதுமக்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டம் காரணமாக இலங்கையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி அவசரநிலை பிரகடனப்படுத்தப்படுவதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு இலங்கை மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர் என்பது அண்டை நாடுகளும் அதிருப்தி தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மக்கள் எழுச்சி காரணமாக இலங்கையில் அமல்படுத்தப்பட்டு வந்த அவசர நிலை வாபஸ் பெறப்படுவதாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே அறிவித்துள்ளார். அவருடைய இந்த அறிவு பொதுமக்களுக்கு நிம்மதி அளித்திருந்தாலும் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

Trending

Exit mobile version