தமிழ்நாடு

நாளை வைகுண்ட ஏகாதேசி தினத்தில் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: பெரும் அதிருப்தி!

Published

on

நாளை வைகுண்ட ஏகாதசி தினத்தில் பெரும்பாலான கோவில்களில் பக்தர்களுக்கு சொர்க்கவாசல் பார்க்க அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி கொண்டிருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதேசி தினத்தில் அனைத்து பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்படும் என்பதும் அதிகாலையில் இருந்தே சொர்க்க வாசலை பார்ப்பதற்காக பக்தர்கள் ஏராளமானோர் குவிந்து இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பை காரணம் காட்டி வைகுண்ட ஏகாதசி தினத்தில் சொர்க்கவாசல் நேரத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற தகவல் வெளிவந்து கொண்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாளை காலை 4 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் பார்க்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னை பார்த்தசாரதி கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது/ இதேபோல் ஒவ்வொரு கோவிலாக பக்தர்களுக்கு வைகுண்ட ஏகாதசி தினத்தில் அனுமதி இல்லை என்று அறிவிப்பு வெளிவது கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் அதிகம் பரவும் நேரத்தில் டாஸ்மாக் கடைகள், திரையரங்குகள் உள்பட பல அமைப்புகள் திறந்து இருக்கும் நிலையில் கோவில்களுக்கு மட்டும் அதுவும் இந்து கோவில்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவது பெரும் அதிருப்தியை பக்தர்கள் மட்டுமே ஏற்படுத்தி உள்ளது என நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version