கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது வீரர்களுக்கு மனைவியை அழைத்து வர இப்போதைக்கு அனுமதி கிடையாது!

Published

on

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் போது விளையாட்டு வீரர்கள் அவர்களது மனைவிகளைத் தங்களுடன் அழைத்துச் செலவது குறித்து இப்போதைக்கு முடிவு எடுக்க முடியாது எனப் பிசிசிஐ நிர்வாகிகள் குழு தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி சர்வதேச போட்டிகளின் போது பிசிசிஐயிடம் மனைவியை அழைத்துச் செல்ல அனுமதி வேண்டும் என்று கோரிக்கை வைத்த பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

இது குறித்துப் பிசிசிஐ நிர்வாகிகளிடம் தொடர்புக்கொன்று கேட்ட போது விராட் கோஹ்லி மனைவியைச் சர்வதேச போட்டிகளின் போது அழைத்துச் செல்ல அனுமதி கேட்டது உன்மை தான் என்றும் ஆனால் அது குறித்து இப்போதைக்கு நாங்கள் முடிவு எடுக்கப் போவதில்லை என்றும் புதிய நிர்வாகம் அதனை முடிவு செய்யும் என்றும் அது வரை கொள்கையில் மாற்றம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் செல்லும் போது மனைவி மற்றும் பெண் தோழிகளை அவர்கள் குடும்பத்துடன் 2 வாரங்கள் வரை தங்கள் அனுமதி அளிப்பதாகச் சென்ற ஆண்டுப் பிசிசிஐ தெரிவித்து இருந்தது.

Trending

Exit mobile version