தமிழ்நாடு

ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் இல்லை: உயர் நீதிமன்றம் அதிரடி!

Published

on

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கேட்ட உடன் சைக்கிள் சின்னத்தை ஒதுக்கியது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் தஞ்சை தொகுதியில் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது தஞ்சையில் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாகி உள்ளது. அதாவது சைக்கிள் சின்னம் வேண்டுமானால் தமாகா இரண்டு தொகுதியில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையை இந்திய தேர்தல் ஆணையம் விதித்திருந்தது. ஆனால் தமாகா இரண்டு தொகுதிகளில் போட்டியிடாமல் ஒரு தொகுதியில் மட்டும் தான் போட்டியிடுகிறது.

இதனையடுத்து தமாகா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. சைக்கிள் சின்னத்தை தங்களுக்கு நிரந்தர சின்னமாக ஒதுக்க வேண்டும் எனவும், தஞ்சையில் தங்களை சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அனுமதிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தது. இதில் தேர்தல் ஆணையம் தமாகாவுக்கு இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அனுமதி வழங்கப்பட்டது, எனவே ஒரு தொகுதியில் போட்டியிடும் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் கிடையாது என வாதிட்டது.

இதனை கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் விதித்த நிபந்தனைகளுக்கு தடை விதிக்க இயலாது என கூறி தமாகா கோரிக்கையை ஏற்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம் தஞ்சை மக்களவை தொகுதியில் தமாகா சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.

Trending

Exit mobile version