தமிழ்நாடு

போச்சே.. போச்சே.. விசிலடிக்காமல் நின்ற குக்கர்.. குழப்பத்தில் டிடிவி தினகரன்!

Published

on

சென்னை: தமிழகத்தில் அடுத்தடுத்து தேர்தல்கள் வர உள்ள நிலையில் குக்கர் சின்னத்தை அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பெற முடியாமல் போய் இருப்பது டிடிவி தினகரனுக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

எந்த பக்கம் சென்றாலும் சறுக்கல் என்ற நிலையில்தான் தற்போது டிடிவி தினகரனின் நிலை சென்று கொண்டு இருக்கிறது. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தோல்வி, திருவாரூர் தேர்தல் ஒத்திவைப்பு, செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்தது என்று வரிசையாக நிறைய பிரச்சனைகளை டிடிவி தினகரன் எதிர்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது இந்த பிரச்சனைகளுடன் சேர்ந்து குக்கரும் டிடிவி தினகரனுக்கு எதிராக விசில் அடிக்க தொடங்கி இருக்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்து இருக்கிறது. குக்கர் சின்னம் என்பது பொதுவானது, அதை டிடிவி தினகரனுக்கு நிரந்தரமாக ஒதுக்க முடியாது. தேர்தல் நேரத்தில் வேறு சின்னம் வேண்டுமானால் ஒதுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Trending

Exit mobile version