இந்தியா

மேற்குவங்கத்தில் பாஜக வென்றால் நான் தொழிலையே விட்டுவிடுகிறேன்: பிரசாந்த் கிஷோர்

Published

on

ஒரு காலத்தில் பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்து கொண்டிருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது பாஜகவுக்கு எதிராக வேலைசெய்து கொண்டிருக்கிறார். தமிழகத்தில் திமுகவுக்கு அரசியல் ஆலோசனை கூறி வரும் அவர், மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி கட்சிக்கும் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அவர் செய்தியாளர் சந்திப்பில் மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றால் நான் என் தொழிலையே விட்டு விடுகிறேன் என்று கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக 100 சீட்டுக்கு மேல் வென்றால் என் தொழிலையே விட்டு விடுகிறேன். என் நிறுவனமான ஐபேக்கை மூடிவிட்டு நான் வேறு வேலைக்கு செல்கிறேன். இந்த தேர்தல் உத்தி வேலையே வேண்டாம் என்று போய் விடுகிறேன் என்று கூறியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை, எதிர்பார்த்ததை செய்யவும் முடியவில்லை, அதனால் தான் அங்கு தோல்வியுற்றோம். ஆனால் மேற்கு வங்க மாநிலத்தில் அந்த பிரச்சனை கிடையாது. மம்தா பானர்ஜி எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளார். மேற்குவங்க தேர்தலை மட்டும் நான் அவருக்கு வெற்றி பெற்றுக் கொடுக்கவில்லை என்றால் இந்த வேலைக்கு நான் தகுதியானவன் இல்லை என்றே விலகிவிடுவேன்.

திரிணாமுல் காங்கிரஸ் தானாகவே விழுந்தால் தான் பாஜக அங்கு வெல்ல முடியும் என்ற சூழ்நிலை தான் இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டிகள் உள்ளன. அதை சரி செய்தாலே அக்கட்சி கண்டிப்பாக தேர்தலில் வெற்றி பெற்று விடும்.

பாஜக நாங்கள் 200 இடங்களை மேற்குவங்கத்தில் வெல்வோம் என்று கூறுகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர்களின் பதற்றத்தை அதிகரிப்பதற்காக அவ்வாறு கூறுகின்றனர். வெற்று காற்றையும் சப்தத்தையும் வைத்துக்கொண்டு தேர்தலில் வெற்றிபெற முடியாது. பாஜக போடும் கூட்டங்களூக்கு 200 பேர்கள் கூட வருவது கிடையாது. மோடிக்கு மட்டும்தான் கூட்டம் வருகிறது. எனவே பாஜக மேற்கு வங்கத்தில் வெல்ல வாய்ப்பே இல்லை என்றும் மம்தா தான் மீண்டும் முதல்வராவார் என்றும் அவர் தெரிவித்தார்.

seithichurul

Trending

Exit mobile version