தமிழ்நாடு

பிப்ரவரி 26ஆம் தேதி புத்தகமில்லா தினம்: ரூ.1.20 கோடி ஒதுக்கிய தமிழக அரசு

Published

on

பிப்ரவரி 26ஆம் தேதி தமிழகம் முழுவதும் புத்தகம் இல்லாத தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளதை அடுத்து தமிழக அரசு அதற்காக 1.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புத்தகங்களை மட்டுமே படிக்கும் மாணவர்களாக தமிழக மாணவர்கள் இருக்கக்கூடாது என்றும் பல விஷயங்களை கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக புத்தகம் இல்லாத தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 26-ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 26-ஆம் தேதி புத்தக தினம் கடைபிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அன்றைய தினம் மாடி தோட்டம், மூலிகை தாவர வளர்ப்பு, பாரம்பரிய கலைகள் குறித்து புத்தகம் இல்லாத தினத்தில் பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினத்தில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கவும், பரிசுப் பொருட்கள் வழங்கவும், 1.2 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version