தமிழ்நாடு

பொங்கல் பரிசு பெற கைரேகை தேவையில்லை.. மக்கள் மகிழ்ச்சி!

Published

on

தமிழக அரசு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

தற்போது ரேஷ்ன் கடைகளில் பொருட்கள் பெற கைரேகை கட்டாயம். ஆனால் பல இடங்களில் கைரேகை வைத்தால் எடுத்துக்கொள்வதில்லை என்ற புகார்கள் எழுந்து வருகிறது.

எனவே அது குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் காமராஜ், “பொங்கல் பரிசை பொருத்த வரையில், பையோமெட்ரிக் முறை அமல்படுத்தப்பட மாட்டாது. ஏற்கனவே இருந்த ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்யும் முறையைப் பின்பற்றப்படும்” என்று கூறினார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பால், கைரேகை பிரச்சனைகள் இருந்து ரேஷன் அட்டைதாரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பொங்கல் தொகுப்பில் 2,500 ரூபாய் மட்டுமல்லாமல் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி நீள கரும்புத் துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் ஆகியவை அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version