இந்தியா

ஜாவத் புயலில் ஏற்பட்ட திடீர் மாற்றம்: ஆந்திர, ஒடிசா மக்கள் நிம்மதி!

Published

on

ஜாவா புயலில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலம் பெரிய ஆபத்தில் இருந்து தப்பியது என்று செய்திகள் வெளியானதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு அந்தமான் பகுதியில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு அதன்பின்னர் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்றது என்றும் நேற்று அது புயலாக மாறியது என்பது தெரிந்ததே. ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலம் இடையே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக இரண்டு மாநிலங்களிலும் மீட்பு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன என்பதும் முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜாவத் புயல் இன்று பிற்பகல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி கரையை கடக்கும் என்றும் அறிவித்துள்ளது. மீண்டும் புயலில் இருந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதை அடுத்து ஆந்திரா, மேற்கு வங்கம், ஒரிசா ஆகிய கடலோர மாநிலங்கள் பெரிய பாதிப்பில் இருந்து தப்பித்து விட்டன என்று கூறப்பட்டிருப்பதை அடுத்து அந்த பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இருப்பினும் 16 தேசிய பேரிடர் மீட்பு படைகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் முகாம்களை அமைத்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

seithichurul

Trending

Exit mobile version