தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ தேர்வு: 8.59 மணி வரை தான் அனுமதி: டி.என்.பி.எஸ்.சி தலைவர் அறிவிப்பு

Published

on

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுகள் வரும் 21ம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் தேர்வு அறைக்கு தேர்வர்கள் 8.59 மணிக்குள் வரவேண்டும் என்றும் 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

வரும் 21ம் தேதி குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ 4 தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில் இந்த தேர்வை 11.78 லட்சம் பேர் எழுத இருப்பதாகவும், தமிழ் வழியில் படித்தவர்கள் 79 ஆயிரத்து 942 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

tnpscதமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் 114 மையங்களில் இந்த தேர்வு நடைபெற இருப்பதாகவும் அதிகபட்சமாக சென்னையில் 7 மையங்களில் தேர்வுகள் நடத்தப்பட இருப்பதாகவும் குறைந்தபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 3 மையங்களில் தேர்வுகள் எழுதப்பட்ட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .

இந்த தேர்வை கண்காணிக்க 333 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது அதுவும் 6400 சோதனை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் இந்த தேர்வின் முடிவுகள் ஜூலை இறுதியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

 

 

Trending

Exit mobile version