தமிழ்நாடு

3வது அணியுடன் இணைகிறதா காங்கிரஸ்: கே.எஸ்.அழகிரி பதில்

Published

on

திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் காங்கிரஸ் கட்சி, கமல்ஹாசன் அமைத்துள்ள மூன்றாவது அணியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

திமுக தரப்பில் இருந்து 20 தொகுதிகள் மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாகவும் ஆனால் காங்கிரஸ் கட்சியை 40 தொகுதிகளை கேட்பதாகவும் இதனால் பேச்சுவார்த்தை இழுபறியில் இருப்பதால் திமுக கூட்டணியில் இருந்து விலக காங்கிரஸ் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.

திமுக கூட்டணியில் இருந்து விலகி கமல்ஹாசன் தலைமையிலான மூன்றாவது அணியில் காங்கிரஸ் இணையலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று இதுகுறித்த இதுகுறித்து பேட்டி அளித்த கேஎஸ் அழகிரி ’மூன்றாவது அணி மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் திமுகவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும் கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குண்டு ராவ் அவர்களும் இதே கருத்தை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றுவரை கமல் கட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இன்று திடீரென பல்டி அடித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து திமுக கொடுக்கும் தொகுதிகளை வாங்கிக்கொண்டு அந்த கூட்டணியிலேயே தொடர வாய்ப்பு உள்ளது என்பதுதான் இப்போதைய காங்கிரஸ் கட்சியின் நிலைமை இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version