சினிமா

சத்தமில்லாமல் சாதனை செய்த தர்பார் பட நடிகை.. பாராட்டும் திரையுலகம்…

Published

on

மலையாள நடிகை நிவேதா தாமஸ் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் மகளாகவும், தர்பார் படத்தில் ரஜினியின் மகளாகவும் நடித்துள்ளார்.

மேலும், ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதுபோக, போராளி, குருவி உள்ளிட்ட படங்களிலும் அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளர். தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் தனக்கென ஒரு மார்க்கெட்டை அவர் உருவாக்கி வைத்துள்ளார்.

மகள் வேடம் என்றாலே நிவேதா தாமஸை அழைப்போம் என தயாரிப்பாளர்கள் நினைக்கும் அளவுக்கு அழகாக நடிக்கும் திறமை உடையவர் நிவேதா தாமஸ்.

இந்நிலையில், சமீபத்தில் உலகின் மிக உயரமான சிகரமான கிளிமஞ்சாரோவில் ஏறி அவர் சாதனை படைத்துள்ளார். அதற்காக சுமார் 6 மாதங்கள் அவர் தீவிர பயிற்சி செய்துள்ளார். கிளிமஞ்சாரோ சிகரத்தில் இந்திய தேசியக்கொடியுடன் அவர் நிற்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பகிர்ந்து.‘நான் சாதித்து காட்டிவிட்டேன். உலகின் மிக உயரமான கிளிமஞ்சாரோ சிகரத்தின் உச்சியில் நிற்கிறேன்’ என அவர் பதிவிட்டுள்ளார். நிவேதா தாமஸின் இந்த சாதனைக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ntho

seithichurul

Trending

Exit mobile version