உலகம்

பாஜகவில் பிளவு.. மோடியை சீண்டும் நிதின் கட்கரி.. புதிய பரபரப்பு

Published

on

டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடியையும், பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவையும் மறைமுகமாக தாக்கி பேசிய இருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கி உள்ளது.

2019 தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்து உள்ளது. பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவாரா என்று சந்தேகங்கள் எழுந்துள்ளது.

பிரதமர் மோடிக்கு பதிலாக வேறு ஒரு நபரை முன்னிறுத்த வேண்டும் என்றும் பாஜகவில் குரல்கள் எழுந்துள்ளது.

மோடிக்கு பதிலாக மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பிரதமர் வேட்பாளராக பாஜக நிறுத்த வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது. இவருக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஆதரவு தெரிவித்து வருகிறது. இது பாஜகவில் சிறிய பிளவை உருவாக்கி உள்ளது.

இந்த நிலையில் நிதின் கட்கரி பாஜகவின் ஐந்து மாநில தேர்தல் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், தலைமை என்பது வெற்றி தோல்வி இரண்டிற்கும் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். வெற்றியை கொண்டாட நிறைய பேர் இருக்கிறார்கள். தோல்விதான் இங்கு அனாதையாக உள்ளது. தோல்விக்கு யாரும் பொறுப்பேற்பதில்லை.

Trending

Exit mobile version