இந்தியா

மாட்டுச்சாணத்தில் சுவர் ‘பெயிண்ட்’- நிதின் கட்கரி பலே ஐடியா..!

Published

on

மாட்டுச்சாணத்தில் சுவர் பெயின்ட் ஆன ’வேதிக் பெயின்ட்’ என்பதை அறிமுகம் செய்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

இயற்கை முறையிலான சுவர் பெயின்ட் பயன்படுத்த மாட்டுச்சாணத்தை உபயோகித்து ‘வேதிக் பெயின்ட்’ தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பெயின்ட் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தவும் உதவும் என்கிறார் அமைச்சர் நிதின் கட்காரி. இந்த பெயின்ட் காதி மற்றும் கிராமப்புற தொழில் முனைவோர் ஆணையத்தின் கீழ் தயார் செய்யப்படுகிறது.

இந்த பெயின்ட் விற்பனை விரைவில் காதி-யின் வாயிலாகத் தொடங்கப்படும் என்றும் நிதின் கட்காரி அறிவித்துள்ளார். இயற்கையிலேயே கிருமி, யூஞ்சை, பாக்டீரியாக்களை எதிர்க்கும் திறன் கொண்ட இந்த சாணத்தை அதிக நன்மை என்றும் விளக்கி உள்ளார். இந்த பெயின்ட் விற்பனையின் மூலம் ஒரு விவசாயி-க்கு ஆண்டுக்கு 55 ஆயிரம் ரூபாய் அதிக லாபம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version