தமிழ்நாடு

ஊருக்குள் வந்த நித்தியானந்தா சீடரை அடித்து வீரட்டிய பொதுமக்கள்: சினிமா போல் ஒரு பரபரப்பு!

Published

on

ராசிபுரம் பகுதிக்கு காரில் வந்த நித்தியானந்தாவை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அடித்து விரட்டிய சம்பவம் சினிமா காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராசிபுரத்தை சேர்ந்த ராமசாமி என்பவர் என்பவரின் மனைவி அத்தாயி. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் போய் சேர்ந்தார். இதனால் கடந்த 4 ஆண்டுகளாக வர் வீடு திரும்பவில்லை. அவரிடம் பலமுறை அவருடைய கணவர் மற்றும் மகன் பேசியும் அவர் வரவிரும்பவில்லை என்று கூறிவிட்டார்.

இந்த நிலையில் அத்தாயி பெயரில் இருந்த வீட்டின்மேல் வங்கியில் கடன் இருந்தது. இந்த கடனை திருப்பி செலுத்தாததால் அந்த வீடு ஜப்திக்கு வந்தது. இதனை அடுத்து இராமசாமி கஷ்டப்பட்டு பணத்தை ஏற்பாடு செய்து வங்கியில் கட்டிவிட்டார். ஆனால் அத்தாயி கையெழுத்து இருந்தால் மட்டுமே பத்திரத்தை கொடுக்க முடியும் என வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர் .இதனை அடுத்து பெங்களூரில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள அவர்களிடம் பேசி அத்தாயியை அழைத்து வந்து கையெழுத்து போட ராமசாமி ஒப்புதல் பெற்றார்.

இந்த நிலையில் மூன்று நித்தியானந்தா சீடர்கள் அத்தாயியை ராசிபுரத்திற்கு காரில் அழைத்து வந்தனர். ஊருக்குள் நுழையும் போதே அங்கு தயாராக காத்திருந்த பொதுமக்கள் காரை மறித்து அத்தாயியை மட்டும் தனியாக அழைத்துச் சென்று விட்டு மூன்று சீடர்களையும் அடித்து விரட்டினர். உயிருக்கு பயந்து அவர்கள் காரில் வேகமாக திரும்பி விட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அத்தாயி வீடு திரும்ப முடிவு செய்ததாகவும் ஆனால் அவருக்கு வீடு திரும்ப அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இதே பகுதியை சேர்ந்த பலர் நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சிக்கி உள்ளதாகவும் அவர்களையும் மீட்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.

seithichurul

Trending

Exit mobile version