வைரல் செய்திகள்

ஜோ பைடனுக்கும் கமலா ஹாரிஸ்-க்கும் ஆசிர்வாதக் கடிதம் எழுதிய நித்தியானந்தா..!

Published

on

அமெரிக்காவின் புதிய அதிபராகவும் துணை அதிபராகவும் பதவி ஏற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ்-க்கு நித்தியானந்தா ஆசிர்வாதம் அளித்து கடிதம் அனுப்பி உள்ளார்.

அமெரிக்காவின் 46-வது அதிபர் ஆக ஜோ பைடனும் அமெரிக்காவின் 49-வது துணை அதிபராக கமலா ஹாரிஸும் பதவி ஏற்றுள்ளார்கள். உலக அரங்கில் பல தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கைலாச நாட்டின் கடவுள் எனத் தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் நித்தியானந்தாவும் அமெரிக்கத் தலைவர்கள் இருவருக்கும் ஆசிர்வாதம் அளிப்பதாகக் கடிதம் அனுப்பி உள்ளார்.

நித்தியானந்தா அனுப்பியுள்ள கடிதத்தில், ”இந்து மதத்தின் போப் ஆண்டவரான நான், உலக அளவில் 2 பில்லியனுக்கும் அதிகமானோரால் பின்பற்றப்படும் பழமை மிகுந்த ஹிந்து மதத்தைப் பின்பற்றும் நாகரிகம் மிகுந்த கைலாசா நாட்டின் சார்பில் 46வது அதிபராகப் பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனுக்கும் 49-வது துணை அதிபராகப் பொறுப்பேற்றுள்ள கமலா ஹாரிஸ்-க்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கும் உங்களது ஆட்சிக்கும் அமெரிக்கா மற்றும் அதனது குடிமக்களுக்கும் நல்ல பிரகாசமான எதிர்காலம் அமைய நான் ஆசிர்வதிக்கிறேன். உலகில் பொறுப்புள்ள தலைமை கொண்ட நாடாக அமெரிக்கா தொடர்ந்து உலகின் அமைதிக்கும் வளத்துக்கும் நலத்துக்கும் உதவட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Trending

Exit mobile version