உலகம்

கொரோனா பீதி: இந்தியாவிலிருந்து ‘கைலாசா’-வுக்கு வரத் தடை போட்ட நித்தி!

Published

on

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் கொரோனாவில் இரண்டாம் அலை மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ‘கைலாசா’ நாட்டின் அதிபர் சாமியார் நித்தியானந்தா, தங்கள் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து யாரும் வரக் கூடாது என தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

இந்தியாவில் மட்டுமல்லாமல் பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மலேசியா நாட்டில் இருந்தும் யாரும் கைலாசாவுக்கு வருவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா இரண்டாம் அலையைக் கணக்கில் கொண்டு இந்த புதிய உத்தரவு அமலுக்கு வருவதாக நித்தியானந்தா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

ஈக்வெடார் தீவுகளில் உள்ள ஒரு தீவில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நித்தியானந்தா தலைமறைவாக இருந்து வருகிறார். பல்வேறு வழக்குகளில் இந்தியாவில் தேடப்படும் நபராக இருக்கும் நித்தியானந்தாவை, சர்வதேச போலீஸாராலும் தேடப்பட்டு வருகிறார். 

ஆனால் அவரோ தொடர்ந்து ‘கைலாசா’ நாடு குறித்து அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு அதிரவிட்டு வருகிறார். 

Trending

Exit mobile version