தமிழ்நாடு

கைலாசாவில் சீமானுக்கு அனுமதி கிடையாது; நித்தி அதிரடி அறிவிப்பு!

Published

on

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராகப் பேசிய சீமான், தனக்குக் குடியுரிமை கிடையாது என்றால், நித்தியானந்தாவின் கைலாசாவுக்கு சென்றுவிடுவோம் என்று கிண்டலாகக் கூறியிருந்தார்.

சீமானின் இந்த பேச்சுக்கு, கைலாசாவின் பிரதமர் என்ற டிவிட்டர் பக்கத்திலிருந்து ஒரு பதிவு வெளியாகி இருந்தது.

அதில், ‘ஸ்ரீ கைலாஷ் ஒன்றும் திறந்த மடம் அல்ல, தமிழ் பிரிவினைவாதிகளை அனுமதிக்க. அரசியல் துறந்து திருவண்ணாமலை கோவிலில் தீபம் ஏற்றி, அன்னை மீனாட்சியின் பாதம் வணங்கினால், சீமானுக்கு குடியுரிமை வழங்கத் தயார்’ என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

கைலாசா செல்ல விருப்பம் தெரிவித்து 40 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பித்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version