சினிமா
சைக்கோவில் இணையும் நித்யா மேனன்!
இயக்குநர் மிஷ்கின் அடுத்து இயக்க உள்ள சைக்கோ படத்தில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
துப்பறிவாளன் படத்தை இயக்கிய மிஷ்கின் அடுத்து உதயநிதி ஸ்டாலினை வைத்து படம் ஒன்றை இயக்க உள்ளார். இதற்கு சைக்கோ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் தற்போது இவர்களுடன் இயக்குநர் ராம் மற்றும் நித்யா மேனன் ஆகியோரும் நடிக்க உள்ளதாக இப்படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீ ராம் தெரிவித்துள்ளார்.
நடிகை நித்யா மேனன் துல்கர் சல்மானுடன் ஓ காதல் கண்மணி, சூர்யாவின் 24, விக்ரமின் இருமுகன், விஜய்யின் மெர்சல் ஆகிய படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். மேலும் இவர் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சைக்கோ படத்தில் நிதியா மேனன் நடிக்க உள்ளது கவனம் பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் வெள்ளிக் கிழமை முதல் ஆரம்பமாக உள்ளது. இளையராஜா இந்த படத்துக்கு இசையமைக்க உள்ளார்.