இந்தியா

பட்ஜெட் 2021: டேப்ளட் மூலம் பட்ஜெட்டை வாசிக்கவுள்ள நிர்மலா சீதாராமன் – பேப்பருக்கு பை-பை!!

Published

on

இன்று காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் 2021-ஐ தாக்கல் செய்கிறார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்றைய பட்ஜெட்டானது வழக்கமாக பேப்பரில் அச்சடிக்கப்பட்டு, அதிலிருந்து வாசிக்கப்படாது. மாறாக, டேப்ளட் உதவியுடன் முழு பட்ஜெட்டும் வாசிக்கப்படும்.

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தடுக்கும் நோக்கில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட், பேப்பர் இல்லாமல் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் பிரதமர் நரேந்திர மோடியின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்தை ஊக்குவிக்கும் நோக்கிலும் இன்றைய பட்ஜெட், டேப்ளட் மூலம் தாக்கல் செய்யப்படும்.

அதேபோல இந்த ஆண்டு பட்ஜெட்டை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சுலபமாக கிடைக்கப் பெறும் வகையில், ‘யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்’-ஐ துவக்கி வைத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.

இந்தியா சுதந்திரம் பெற்றதில் இருந்து மத்திய பட்ஜெட்டானது, ஆவணக் கோப்பாக தயாரிக்கப்பட்டு, அதை ஒரு பெட்டியில் வைத்து எடுத்து வரப்படும். பிரிட்டிஷ் கால நடைமுறையான இது தற்போது மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று, பொருளாதார சரிவு, ஜி.டி.பி வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இன்றைய பட்ஜெட் இருக்குமா என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version