இந்தியா

‘அது வேற வாய்… இது இப்ப என்ன வாய்..?’- பெட்ரோல் விலை உயர்வு; பல்டியடித்த நிர்மலா #ViralVideo

Published

on

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்தியில் பாஜக ஆட்சி வருவதற்கு முன்னரும், இப்போது அவர் பேசியுள்ள பேச்சும் வைரலாகி வருகிறது.

2013 ஆம் ஆண்டு நிர்மலா சீதாராமன் பேசிய காணொலியில், ‘நாட்டில் உள்ள எளிய மக்களின் சுமையைக் குறைக்க வேண்டும் என்று மத்தியில் ஆட்சி புரியும் காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால், இப்படி 7 ரூபாய் வரை பெட்ரோல் விலையை உயர்த்தி இருக்காது’ என்று பேசுகிறார்.

அதே நேரத்தில் அவர் சில நாட்களுக்கு முன்னர் நாட்டில் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்குவது குறித்துப் பேசுகையில், ‘இந்தியாவில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் தான், பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டும்.

காரணம், மத்திய அரசு எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டது. அரசுக்கு அதில் எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை.

பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைப்பதில் எதாவது வழிகள் இருக்கிறதா என்பதை மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டாக அமர்ந்து ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். அதன் மூலம் எரிபொருட்களுக்கு ஒரு நியாயமான விலையை நிர்ணயிக்க முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த இரு சம்பவங்களின் காணொலிகள் தான் தற்போது, இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version