இந்தியா

முகேஷ் அம்பானியின் மனைவியை முந்தினார் நிர்மலா சீதாராமன்: குவியும் வாழ்த்துக்கள்!

Published

on

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவியை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முந்தி விட்டதாக வந்த தகவலை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

பார்ச்சூன் இந்தியா என்ற நிறுவனம் சார்பில் 2021 ஆம் ஆண்டின் சக்தி வாய்ந்த பெண்கள் குறித்த பட்டியல் வெளியானது. இந்த பட்டியலில் முதலிடத்தில் நிர்மலா சீதாராமன், இரண்டாவது இடத்தில் நீதா அம்பானி ஆகிய இருவரும் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த பட்டியலில் முதலிடத்தைப் பெற்ற மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு சக அமைச்சர்கள் மற்றும் பாஜக பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தனது டுவிட்டரில் குஷ்பு கூறியபோது இந்தியாவின் பெருமைக்குரிய நிர்மலா சீதாராமன் அவர்களை வாழ்த்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் நம்முடைய நிறுவனர் டாப் 50 பெண்கள் பட்டியலில் இடம்ப உள்ளார் என்றும் கொரோனா காலத்தில் நீட்டா அம்பானியின் தொலைநோக்கு பார்வை மற்றும் தலைமை பண்பு இந்த இடத்தை அவருக்கு பெற்றுக் கொடுத்தது என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் முகேஷ் அம்பானி – நீட்டா அம்பானி மகள் இந்தப் பட்டியலில் இடம் பெற்று உள்ளார் என்பதும் அவருக்கு 21 ஆவது இடம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் உள்ள முதல் 20 நபர்களின் பட்டியல் இதோ:

1. நிர்மலா சீதாராமன்
2. நீட்டா அம்பானி
3. சௌமியா சுவாமிநாதன்
4. கிரண் மஸும்தார் ஷா
5. சுசித்ரா எல்லா
6. அருந்ததி பட்டாச்சார்யா
7. கீதா கோபிநாத்
8. டெஸ்ஸி தாமஸ்
9. ரேகா மேனன்
10. சுனிதா ரெட்டி, ஷோபனா கமினேனி, ப்ரீத்தா ரெட்டி, சங்கீதா ரெட்டி
11. அன்ஷுலா கண்ட்
12. ரேணு சூத் கர்னாட்
13. ஷோபனா பார்தியா
14. கல்லி பூரி
15. ரேவதி அத்வைதி
16. லீனா நாயர்
17. மல்லிகா ஸ்ரீனிவாசன்
18. சுவாதி பிராமல்
19. விஷாகா முல்யே
20. விபா படைகர்

seithichurul

Trending

Exit mobile version