தமிழ்நாடு

தமிழகத்தில் 40 தொகுதிகளும் நமக்குதான்: நிர்மலா சீதாராமன் பேச்சு!

Published

on

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல் கட்சியினர் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணியற்ற ஊக்கிவித்து வருகின்றனர். இதனை நீண்டு நாட்களாக திட்டமிட்டு நடத்தி வருகிறது பாஜக. பிரதமர் மோடி வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் நிர்வாகிகளிடம் பேசி வருகிறார்.

இந்நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாஜக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்படுவது குறித்து ஆவேசமாக பேசினார். இது மிகவும் கீழ்த்தரமான செயல் என விமர்சித்தார் அவர்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு எல்லா வகையிலும் திமுக இடையூறாக இருக்கிறது. மோடி சுயநலம் இல்லாத பிரதமராக இருப்பதால் தைரியமாகச் செயல்படுகிறார். ஒரே ஒரு எம்பியைதான் தமிழக மக்கள் கொடுத்தார்கள் என்று தமிழகத்தை ஒதுக்கி வைக்காமல் ஏராளமான திட்டங்களை பிரதமர் மோடி தமிழகத்துக்கு கொடுத்துள்ளார்.

மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டிய ஒவ்வொருவருக்கும் பதிலடி கொடுக்க வேண்டும். 40 தொகுதிகளையும் நாம் கைப்பற்ற வேண்டும். கூட்டணி குறித்து யோசிக்காமல் பாஜகவினர் தேர்தல் பணிகளைத் தொடங்க வேண்டும் என நிர்வாகிகளை ஊக்குவித்தார் நிர்மலா சீதாராமன். ஆனால் பாஜக தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்றுமா என்ற கேள்விக்கு தமிழகத்தில் உள்ள சின்ன குழந்தைக்கும் பதில் தெரியும்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version