தமிழ்நாடு

நிர்மலா தேவியின் வாயைப் பொத்தி இழுத்துச்சென்ற காவல்துறையினர்!

Published

on

கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவிக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை. இந்த வழக்கில் இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து திருவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் ஆஜராக அழைத்து வரப்பட்டார் நிர்மலா தேவி.

இதுவரை பத்திரிக்கையாளர்களிடம் பேசாத நிர்மலா தேவி இன்று முதன்முறையாக பேசினார். அப்போது, என்பேரில் வந்த வாக்குமூலம் பொய், சிபிசிஐடி காவல்துறையினர் வெள்ளைத் தாளில் மட்டுமே என்னிடம் கையெழுத்து வாங்கினார்கள். இன்னும் நிறைய விஷயங்களும், ஆதாரங்களும் இருக்கின்றன, அதையெல்லாம் வக்கீல் பசுவன் பாண்டியனிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றார்.

இதனையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கப்படாமல் இருப்பதன் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இருக்கலாம் என்றும், உயர்மட்ட அதிகாரிகளின் இடையூறு இருக்கிறது என்றும் கூறினார் நிர்மலா தேவி. தொடர்ந்து தனக்கு மிரட்டல் இருப்பதாக கூறிய நிர்மலா தேவியின் வாயை பொத்தினார் எஸ்கார்ட் போலிஸ் ஜெயக்கொடி.

இதனையடுத்து உதவி ஆய்வாளர் கலைச்செல்வி உள்ளிட்ட காவல்துறையினர் நிர்மலா தேவியிடம் கடுமையாக நடந்துகொண்டு அவரது கையைப்பிடித்து வேகமாக இழுத்து சென்றவிட்டனர். இவை அனைத்தும் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையிலேயே நடந்துள்ளது. மேலும் பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.

காவல்துறையினர் இன்று நிர்மலா தேவியிடம் நடந்துகொண்ட விதத்தை பார்க்கும் போது காவல்துறை இந்த வழக்கில் எதையோ மறைக்க முயல்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. நிர்மலா தேவியின் வாயை பொத்த வேண்டிய அவசியம் என்ன காவல்துறைக்கு என பலரும் சதேகத்தை கிளப்புகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version