தமிழ்நாடு

மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நிர்மலா தேவி!

Published

on

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இவர் சில தினங்களுக்கு முன்னர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். இந்நிலையில் தற்போது அவர் நெல்லையில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 8-ஆம் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்துக்கு வந்திருந்த நிர்மலா தேவி, நீதிமன்ற வளாகத்தில் கண்களை மூடி தியானம் செய்தது போன்ற காட்சி ஊடகங்களில் வெளியானது. அப்போது கண்களை மூடி தியானிப்பது போல இருந்த நிர்மலா தேவி, காமாட்சி அம்மன் தனக்குள் இருப்பதாக கூறினார். மேலும் தன்னை மாட்டிவிட்ட அந்த கல்லூரி மாணவிகள் தூக்கிட்டு இறந்துவிட்டதாக பொய் கூறினார்.

மேலும் தொடர்ந்து ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். மொபைல் போனை தரையில் ஓங்கி அடித்து, அதனை சரிசெய்ய சென்ற கடையிலும் தியானம் செய்வது போல நடந்துகொண்டார். மேலும் சாலையில் அங்கும் இங்குமாக நடந்து, காகிதங்களை பொறுக்கிக்கொண்டு அவர் செய்த செயல்கள் பீதியை கிளப்பும் விதமாக இருந்தது.

இந்நிலையில் நிர்மலா தேவி மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டு வந்தது. இதனையடுத்து அவர் நெல்லையில் உள்ள தனியார் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு ஆறு நாட்கள் தங்கி அவர் சிகிச்சை எடுத்துக்கொள்ள இருப்பதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version