இந்தியா

நாடு கடத்தினால் நிரவ் மோடி தற்கொலை செய்துகொள்வார்- வாதாடும் வழக்கறிஞர்

Published

on

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து லண்டனுக்குத் தப்பி ஓடிய நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்தக் கூடாது என அவரது வழக்கறிஞர் லண்டன் நீதிமன்றத்தில் வாதாடி உள்ளார்.

பிரபல வைர நகை வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்து நாட்டைவிட்டு தப்பி ஓடிவிட்டார். தற்போது லண்டனில் இருக்கும் நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பாக இந்திய அரசு லண்டன் நீதிமன்றத்தில் முறையிட்டு வருகிறது.

முதலில் இந்தியாவின் கோரிக்கையை நிரவ் மோடியை சிறையில் அடைக்க உத்தரவிட்டது லண்டன் நீதிமன்றம். ஒஇன்னர் இந்தியாவுக்கு நாடு கடத்துமாறும் உத்தரவிட்டது. ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்ப்பை எதிர்த்து நிரவ் மோடி மேல்முறையீடு செய்யவே வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும், நிரவ் மோடியின் வழக்கறிஞர் வாதாடும் போது, “லண்டன் சிறையில் நிரவ் மோடி மனநலம் மோசமாக உள்ளது. இந்த சூழலில் அவரை மும்பை சிறையில் அடைத்தால் அவர் அங்கு தற்கொலை செய்து கொள்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அவரது மனநிலை குறுத்து மருத்துவ சான்றிதழ் உள்ளது. மேலும், மும்பை சிறையில் கொரோனா பாதிப்பும் அதிகப்படியாக இருப்பதால் அவரை நாடு கடத்த உத்தரவிடக் கூடாது” என்றார்.

seithichurul

Trending

Exit mobile version