தமிழ்நாடு

கேரளாவை தொடர்ந்து தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறி?

Published

on

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நிபா வைரஸ் அறிகுறியுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இதனை ஆய்வு செய்ததில் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் உள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தமிழகத்துக்கு பரவா வகையில் எல்லையில் தீவிர சோதனையில் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டு வருகிறனர்.

இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்தின் கடலூருக்கு வந்த ஒருவர் கடுமையான காய்ச்சல் காரணமாக காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவருக்கு நிபா வைரஸ் காய்ச்சல் இருக்கலாம் என சந்தேகித்த மருத்துவர்கள் அவரை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்தனர்.

அதன்படி தீவிர மருத்துவ சிகிச்சையில் வைக்கப்பட்டுள்ள அவரது ரத்த மாதிரிகள் புனே மருத்துவ சோதனைக் கூடர்த்திற்கு அனுப்பப்பட உள்ளதாகவும். அதன் முடிவுகள் கிடைத்த பின்னரே உறுதியாக எதையும் கூற முடியும் என்கிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version