இந்தியா

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ்: பீதியில் மக்கள்!

Published

on

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே கடும் அச்சம் நிலவி வருகிறது.

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமை ஒன்றில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி செய்துள்ளார். இருந்தாலும் சோதனை முடிவுகள் வெளியான பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்கிறார்கள். மேலும் கேரள மாநிலம் திரிச்சூரில் 8 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மக்களிடையே பதற்றம் நிலவி வருகிறது. கேரள அரசு உடனடியாக நிபா வைரஸை கட்டுப்படுத்த தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. மருந்துகளும், மருத்துவரகளும் தயார் நிலையில் உள்ளனர். நிபா வைரஸ் குறித்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், யாரும் பயப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையாக இருங்கள், சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என கேரள முதல்வர்பினராயி விஜயன் கூறியுள்ளார். நிபா வைரஸ் அணில் மற்றும் வௌவால் மூலம் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version