இந்தியா

நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது: கேரளா செல்லும் அதிகாரிகள் குழு!

Published

on

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே கடும் அச்சம் நிலவி வந்தநிலையில் நிபா வைரஸ் பரவியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமை ஒன்றில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி செய்தார். இருந்தாலும் சோதனை முடிவுகள் வெளியான பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்றார்கள். மேலும் கேரள மாநிலம் திரிச்சூரில் 8 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் மக்களிடையே பதற்றம் நிலவி வருந்தது. கேரள அரசு உடனடியாக நிபா வைரஸை கட்டுப்படுத்த தீவிர ஆலோசனையில் இறங்கியது. மருந்துகளும், மருத்துவரகளும் தயார் நிலையில் உள்ளனர். நிபா வைரஸ் குறித்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், யாரும் பயப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையாக இருங்கள், சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என கேரள முதல்வர்பினராயி விஜயன் கூறியுள்ளார். நிபா வைரஸ் அணில் மற்றும் வௌவால் மூலம் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புனே தேசிய வைராலஜி ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட அந்த நோயாளியின் இரத்த மாதிரி சோதனையின் முடிவில், அவருக்கு நிபா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தங்கியிருந்த சிலருக்கும் நிபா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் தாக்கியுள்ள அந்த நபர் தொடர்புடைய 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அந்த நபருக்குச் சிகிச்சை அளித்த 2 செவிலியர் உட்பட 4 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கேரள மக்கள் பீதியடைய வேண்டாம், அறிவியல் முறையில் எல்லா தேவைகளும் செய்யப்பட்டு வருகிறது, மத்திய அரசு விரைவில் கேரளாவுக்குத் தேவையான மருந்துகளை வழங்கும். இந்த காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசியானது கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது. அது தற்போது, புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜியில் உள்ளது.

தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம், கால்நடை பராமரிப்புத் துறை, தேசிய நோய் தடுப்பு மையம், ஏஐஐஎம்எஸ், சப்தர்ஜங் மருத்துவமனை, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவற்றைச் சேர்ந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மத்திய அரசின் சார்பில் கேரளாவுக்குச் செல்லவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version