தமிழ்நாடு

ஆகஸ்ட் மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறையா?

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக வங்கிகள் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே இயங்கி வந்த நிலையில் தற்போது கடந்த சில வாரங்களாக மட்டுமே முழுநேரமாக இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அடுத்த மாதம் அதாவது ஆகஸ்ட் மாதம் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்ற தகவல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் மாதம் வங்கி விடுமுறை அளிக்கப்பட்ட நாட்களின் விபரங்கள் பின்வருமாறு:

ஆகஸ்ட் 1 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 8 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 14 – இரண்டாவது சனிக்கிழமை
ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20 – மொஹரம்
ஆகஸ்ட் 22 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 28 – 4வது சனிக்கிழமை
ஆகஸ்ட் 29 – ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட் 30 – ஜென்மாக்ஷ்டமி

மேற்கண்ட ஒன்பது நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் அதற்கேற்ப வங்கிகளில் முடிக்க வேண்டிய பணிகளை முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பது ஞாயிற்றுக்கிழமை ஆகிவிட்டதால் கூடுதலாக விடுமுறை நாள் கிடைக்காமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை ஞாயிற்றுக்கிழமை இல்லாமல் வேறு கிழமைகளில் சுதந்திர தினம் வந்து இருந்தால் வங்கிகளின் விடுமுறை நாள் 10 நாட்களாக இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version