தமிழ்நாடு

அடுத்த ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published

on

அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மிதமான மழையும் கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்டங்களில் அடுத்த ஒரு மணி நேரத்தில் கனமழையும் நீடிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையின் பல்வேறு இடங்களில் தற்போது கனமழை பெய்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கம், எழும்பூர், கோடம்பாக்கம், சென்ட்ரல், கிண்டி, ஆலந்தூர், தேனாம்பேட்டை, நங்கநல்லூர், ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

மேலும் கோட்டூர்புரம், அடையாறு, செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர் உள்பட பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

இந்தநிலையில் அடுத்த ஒரு மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version